18 வயது மாணவியின் சைக்கிள் கூடைக்குள் கடிதம் போட்ட 42 வயது இளைஞன்: இளைஞர்களால் நையப்புடைப்பு!

க.பொ.த உயர்தர மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 42 வயதான “ஒரு தலை காதலன்“ இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (8) மாலை மட்டக்களப்பு, புறநகர் பகுதியில் இடம்பெற்றது.

க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு பிரத்தியேகமாக கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு அண்மையாக இந்த சம்பவம் நடந்தது.

ஆசிரியரிடம் பிரத்தியேக வகுப்பிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவிக்கு, அதே பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்து, காகித துண்டொன்றை வழங்கியுள்ளார். மாணவி வாங்க மறுத்ததையடுத்து, மாணவியின் சைக்கிள் கூடைக்குள் காகித துண்டை போட்டுவிட்டு சென்றுவிட்டார் அந்த காதல் இளவரசன்.

மாணவி பிரத்தியேக வகுப்பிற்கு வரும் சமயங்களில், கடந்த சில நாட்களாக அந்த நபர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பிரத்தியேக வகுப்பில் இந்த விவகாரத்தை சக மாணவர்களிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் தமது நண்பர்களிற்கும், பிரதேச இளைஞர்கள் சிலரிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் மாணவி பிரத்தியேக வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காதல் இளவரசன் சைக்கிளில் மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவர்களும், இளைஞர்களும் அவரை வளைத்துப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபட கூடாதென எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

42 வயதான அந்த நபர் திருமணமாகாதவர் என்றும், சில வருடங்களாக கட்டாரில் தொழில் புரிந்து விட்டு, சில மாதங்களின் முன்னர்தான் சொந்த ஊர் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad