யாழில் இருந்து கைக் குழந்தையுடன் பயணித்த பெண்னிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை மீட்டுள்ள பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 777 போதை மாத்திரைகள் மற்றும் 60 கிராம் கஞ்சா ஆகியவற்றை கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad