டெனிம் ஜீன்ஸ் இல் இரகசிய கமரா பொருத்தி, மாணவிகளின் அந்தரங்க பகுதிகளை படம் பிடித்த பேருந்து நடத்துனர் கைது.

டெனிம் காற்சட்டையின் அடிப்பகுதியில் இரகசிய கமரா பொருத்தி, மாணவிகளின் அந்தரங்க பகுதிகளை படம் பிடித்து, பார்த்து ரசித்து வந்த பேருந்து நடத்துனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி சியம்பலாகொட வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிடபெத்தர பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

36 வயதான பேருந்து நடத்துனர் அணிந்திருந்த டெனிம் காற்சட்டையின் அடிப்பகுதியில் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த பொலிசார், நடத்துனரை அவதானித்துள்ளனர். மேலதிக வகுப்புக்களிற்கு சென்று வரும் மாணவிகளுடன் அவர் ஒட்டி, உரசி உறவாடி வருவது தெரிந்தது.

நடத்துனரை சோதனையிட்ட போது, காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்த பவர்பேங்கில் இணைக்கப்பட்ட டேட்டா கேபிள் சிஸ்டம், கால்சட்டையின் உள்பகுதியில் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு.

அவர் பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்ட போது, ​​வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெறுமதியான மொபைல் ஃபோன் கமரா உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. காற்சட்டையின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கமரா, புளூடூத் வழியாக கைத்தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்தது.

பெறுமதியான கமரா, பவர் பாங்க், மெமரி கார்ட், புளூடூத் மூலம் பார்க்கக்கூடிய ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 1,91,000 ரூபாய் பணமும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சூதாட்டத்தின் மூலம் பெறுமதியான கமராவையும், பணத்தையும் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உபகரணங்களுடன் சந்தேகநபர் நேற்று (10) மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad