யாழில் ஒரே வீட்டில் நிர்.வாணமாக கூத்தடித்த மாணவனும் 2 மாணவிகளும் மக்களால் பிடிக்கப்பட்டனர்.


யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் வீடு ஒன்றில் தங்கியிருந்த நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள இரு வெவ்வேறு பாடசாலைகளில் கற்கும் 18 வயதான மாணவிகள் இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர். குறித்த மாணவர்கள் பிடிபடும் போது மாணவனும், மாணவி ஒருவரும் முழு நிர்.வாண நிலையிலும் மற்றைய மாணவி அரை குறையான ஆடைகளுடனும் பிடிக்கப்பட்டனர்.

யாழ் கொக்குவில் பகுதியில் இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பலரும் தங்கிச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தனர். குறித்த வீடு அனுமதி பெறப்படாத விடுதி போல் செயற்பட்டு வந்துள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டினை நாள் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். வவுனியாவில் குடும்பமாக வசிக்கும் வீட்டு உரிமையாளருக்கு அயலில் வசிப்பவர்கள் அங்கு வந்து தங்குபவர்கள் தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடுகளை கூறியும் அவர் அதனைக் கருத்தில் எடுக்காது நாள் வாடகைக்கு வீட்டினை வழங்கி வந்துள்ளார்.

அங்கு ஜோடிகளாக வந்து தங்கிச் செல்வோர் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளர். ஒரு தடவை குறித்த வீட்டில் தங்கியிருந்த வயோதிபர் ஒருவரும் பெண் ஒருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது பொலிசார் குறித்த இருவரையும் பிடித்த பொதுமக்களையே எச்சரித்து பிடிபட்டவர்களை விடுவித்துள்ளாா்கள். சட்டவிரோதமாக வீட்டினுள் புகுந்ததற்காக வழக்குப் பதிவு செய்வோம் என பொதுமக்களுக்கு பொலிசார் அச்சுறுத்தியதாகவும் தெரியவருகின்றது. இன்னொரு தடவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பெயருடன் கூடிய உத்தியோகபூர்வ சொகுசு வாகனம் ஒன்றில் வந்த இரு பெண்களும் 3 ஆண்களும் இரவிரவாக அந்த வீட்டில் கூத்தடித்து சென்றதையும் அயலில் உள்ளவர்கள் அவதானித்துள்ளார்கள். கொக்குவில் சந்திக்கு சற்று தொலைவில் உள்ள ஆட்டோத் தரிப்பிடத்தில் நிற்கும் ஆட்டோச் சாரதி ஒருவரே அந்த வீட்டிற்கு இவ்வாறானவர்களை தங்க வைக்கும் முகவராக செயற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். கௌரவமானவர்கள் வசிக்கும் அந்த இடத்தில் குறித்த வீட்டின் அயல்பகுதிகளில் வசிப்பவர்கள் குறித்த வீட்டு உரிமையாளரின் இவ்வாறான கேவலமான பணம் பெறும் நடவடிக்கைக்காக கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 10 மணியளவில் அந்த வீட்டுக்கு வயதில் மிகவும் சிறியவர்களாக காணப்பட்ட இரு யுவதிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து பூட்டியிருந்த வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றதை அயலில் வசிப்பவர்கள் அவதானித்துள்ளார்கள். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சைக்கிள் ஒன்றில் இளைஞன் ஒருவனும் உள்ளே சென்றதை அவதானித்துள்ளார்கள். இவர்கள் உள்ளே சென்ற பின்னர் வீடு அமைதியாகவே இருந்துள்ளது. இதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்ற அரச அதிகாரி தலைமையில் வயதானவர்களான பெண்கள் சிலரும் வயோதிபர்கள் சிலரும் 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்தனர். ஏற்கனவே குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களில் இளைஞர்களை பொலிசார் குறித்த வீட்டில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக எச்சரித்ததால் அவர்கள் அங்கு செல்லவில்லை.

உள்ளே அவர்கள் சென்ற போது வீட்டின் அறை ஒன்றில் முழு நிர்வாண நிலையில் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் காணப்பட்டுள்ளனர். அதே வேளை மேலாடைகள் அற்ற நிலையில் ”பிரா” மட்டும் அணிந்த நிலையில் மற்றைய மாணவி காணப்பட்டுள்ளார். இவர்களை மடக்கிப் பிடித்து வீட்டினுள் வைத்து விசாரணை செய்தனர் முதியவர்கள். அவர்கள் பிரபல பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அத்துடன் 3 பேரும் தடகள விளையாட்டு வீர,வீராங்கனைகள் என்பதுடன் மாணவன் குறித்த பாடசாலை ஒன்றில் தேசிய மட்டத்தில் விளையாட்டு ஒன்றில் தெரிவானவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விளையாட்டு நிகழ்வுக்காக சென்ற இடங்களிலேயே இவர்கள் 3 பேரும் அறிமுகமாகியுள்ளார்கள்.

மாணவிகளில் ஒருவர் வங்கி முகாமையாளரின் மகள் என்பதும் அவளது மோட்டார் சைக்கிளிலேயே மற்றைய மாணவியும் வந்துள்ளார். குறித்த வங்கி முகாமையாளரின் மகளே முழு நிர்வாண நிலையில் பிடிபட்டவர். அத்துடன் அவர்கள் பிடிபட்ட அறையில் அன்றே உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறையும் மற்றுமொரு புதிய ஆணுறையும் முதியவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி முகாமையாளரின் மகளின் கைப் பையினுள் 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெறுமதி மிக்க கைத் தொலைபேசி என்பனவும் காணப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களிடம் மேற் கொண்ட விசாரணைகளில் வங்கி முகாமையாளரின் மகளும் குறித்த மாணவனும் காதலா்கள் எனவும் அவர்களின் காதலுக்கு துணையாக மற்றைய மாணவியும் அங்கு வந்தார் எனவும் மாணவர்களால் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் காதலுக்கு துணையாக வந்த மாணவி ஏன் அரைகுறையாக நின்றார் என்ற கேள்விக்கு அவர்கள் மௌனமாக நின்றுள்ளார்கள்.

இதன் பின்னர் மாணவர்கள் 3 பேரின் பெற்றோருக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவித்து அரை மணி நேரத்துக்குள் வங்கி முகாமையாளரான நடுத்தர வயதானவரும் அவரது மனைவியும் வங்கி முகாமையாளரின் தந்தையும் அங்கு சென்றுள்ளனர். அத்துடன் தனது மகளை கண்டிக்காது அங்கு நுழைந்து அவர்களை பிடித்து வைத்திருந்த முதியவர்கள் மீது வங்கி முகாமையாளர் மற்றும் மனைவியும் தந்தையும் ஆங்கிலத்தால் சமாரியாக ஏசியதுடன் துாசண வார்த்தைகளாலும் ஏசியுள்ளார்கள். மகளை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்துவதிலேயே குறியா இருந்ததுடன் தனக்கு நட்பாக இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரிடமும் தொலைபேசியில் வங்கி முகாமையாளர் அவர்களுக்கு முன் உரையாடியுள்ளார். இருப்பினும் அவர்களில் வெருட்டலுக்கு அடிபணியாத பொதுமக்கள் மற்றைய இரு பெற்றோர்கள் வரும் வரையில் வங்கி அதிகாரியிடம் மகளை கையளிக்கவில்லை. அத்துடன் அதிகாரி வந்த காரும் செல்ல முடியாதவாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் தடை ஏற்படுத்தப்பட்டது.

மாணவனின் தந்தை அங்கு வந்த போது அவருக்கு அங்கு நடந்த விடயங்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் விளங்கபடுத்தப்பட்டது. அந்த இடத்திலேயே பொதுமக்களுக்கு முன் மாணவனின் தந்தை மாணவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த மாணவனின் தந்தை வைத்தியசாலை உத்தியோகத்தர் எனத் தெரியவருகின்றது. காதலுக்கு துணை நி்ன்றதாக கூறப்பட்ட மாணவியின் பெற்றோர் அங்கு வந்த போதும் அவர்களுக்கும் நிலமை விளங்கப்படுத்தப்பட்டது. குறித்த மாணவியின் பெற்றோர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள். தமது பிள்ளையின் நடத்தையை அறிந்து அழுது மன்னிப்புக் கேட்டு மகளை விடுவித்துள்ளனர். குறித்த சம்பவங்கள் அங்கு நடைபெற்ற போது வங்கி முகாமையாளரும் அவரது மனைவியும் ( அவரும் அரச உத்தியோகத்தர்) அங்கு நின்ற பொதுமக்களை வீடியோ எடுத்துள்ளார்கள். அதே நேரம் அங்கு நின்ற பொதுமக்களும் சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்தனர்.

மாணவர்கள் பெற்றோரிடம் பொதுமக்களால் அவர்களின் நடத்தைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட பின்னர் வங்கி முகாமையாளர் காரில் ஏறிய பின் தனது மகளை பிடித்து வைத்திருந்த பொதுமக்கள் அனைவரையும் சிறையில் தள்ள நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துவிட்டு சென்றதாக அறிய முடிகின்றது.

அதே நேரம் அவர்களுக்கு வீட்டை அடையாளம் காட்டி குறித்த வீட்டுக்கு பொறுப்பாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் அங்க வரவழைக்கப்பட்டு முகத்துக்கு மாஸ்க் அணிந்து அடையாளம் மறைக்கப்பட்ட இளைஞர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த வங்கி அதிகாரி மற்றும் மனைவி, தந்தை ஆகியோ துாசணம் பேசி பொதுமக்களுடன் முரண்பட்டு சண்டையிட்ட முழுமையான வீடியோ மற்றும் அவரது பெயர் விபரங்கள் எம்மிடம் உள்ளன. வங்கி அதிகாரி தவறான தகவல்களை பொலிசாருக்கு வழங்கி நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அவரது நடவடிக்கை தவறு என்பதற்கான ஆதாமாக உள்ள குறி்தத வீடியோவை நாம் இங்கு வெளியிடுவோம்.

பிள்ளைகளை சரியான முறையில் கண்காணிக்காது அவர்களது போக்கில் வளர விடும் பெற்றோருக்கு இது சமர்ப்பணம்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad