நடுரோட்டில் காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட ஆசிரியை.

தனது ஆசிரியை பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊருபொக்க – தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிதாரி மதுமாலி என்ற 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலையிலிருந்து பேருந்தில் வந்து இறங்கி, கிராமத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட யுவதியின் காதலனே இந்த சம்பவத்தை நடத்தியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் கொலை நடந்த இடத்தில் சந்தேக நபர் மறைந்திருப்பதாகவும், குறித்த இடத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad