ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்கள் தண்டப்பணம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக இந்த தரவு அமைப்பில் பதியப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.