முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பத்தலைவர் மேலதிக சிகிச்சையின் போது நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தசாமி விசுவலிங்கம் (வயது-74) என்ற முதியவரே உயிரிழந்தவராவார். முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு முன்பாக உள்ள முதன்மை வீதியில் சைக்கிளும், வாகனமும் விபத்துக்கு உள்ளானதில், குறித்த முதியவர் படுகாயமடைந்திருந்தார். இதையடுத்து, அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இதையடுத்தே, மேலதிக சிகிச்சையின் போது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.