கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவர் காதல் தோல்வி காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி உயிர்மாய்க்க முயற்சித்தபோது உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலதிக சிகிச்சையின் போது நேற்று உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.