மாதவிடாய் தாமதமாக காரணங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி காலஅளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.

மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக முயற்சி எடுக்காத வரை, அவர்களுக்கு மாதவிடாய் தவறிப்போவதை விட, மற்ற எந்த விஷயமும் பெண்களின் இதயத்திற்கு அச்சத்தை கொடுப்பதில்லை. ஏனெனில் மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது என்று கேட்டால், அது தான் இல்லை. ஆம், மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு அவற்றில் 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம் வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சிலவேளைகளில் அதிக மனஅழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

உடல்நலக் குறைவு
திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இதுதான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.

அட்டவணை மாற்றம்
மாறிவரும் கால அட்டவணைகள், உண்மையில் உடல் கடிகாரத்தின் ஓட்டத்தை மாற்றிவிடும். இது குறிப்பாக பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் ஏற்படும். இதுபோன்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணரமுடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.

மருந்துகள் மாற்றம்
தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சிலசமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின்வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால்தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

அதிக எடையுடன் இருப்பது
அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சிலசமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.

எடை குறைவாக இருப்பது
உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. முக்கியமாக அதிக வேலைபளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும், இந்த தவறுதல் காரணமாகிறது.

தவறான கணித்தல்
மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சிலவேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள். அது தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியாக கணிக்க உதவும்.

பெரி-மாதவிடாய்
பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும். இந்த கால கட்டத்தில் மாதவிடாய் இலேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இன்னும் சிறிது காலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.

இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்ககூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.

கர்ப்பம் தரித்தல்
இறுதியாகதான் கர்ப்பமாக இருப்பதால், மாதவிடாய் தவறி இருக்கலாம்! இதற்கு ஒரு எளிய கர்ப்ப பரிசோதனை செய்வதன் மூலம், அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் கர்ப்ப சோதனை மற்றும் இரத்த கர்ப்ப சோதனைகள் ஹார்மோன் ஹெச்.சி.ஜியை கண்டறிய உதவும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் சோதனையை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கான சோதனை பொருட்கள்/கருவிகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Via FB World Wide Tamil People

மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க சிலவழிகள்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன.

ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன. இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும், தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி உண்டாகும்.

இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு கொடுத்துள்ளோம். இவை பரிசோதிக்கப்பட்டு, பலன்தந்த வழிமுறைகளாகும்.

கல்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கல்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.

மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.

கரட் கண்களுக்கு மிகவும் நல்ல உணவாக இருந்தாலும், மாதவிடாய் வலியை நீக்கவும் உதவுகிறது. கரட் ஜுஸை ஒரு கிளாஸ் தினமும் குடித்து வந்தால், முறையான இரத்த ஓட்டத்தைப் பெற முடியும் என்று மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.

தன்னுடைய அமைதிப்படுத்தும் மற்றும் ஆற்றுப்படுத்தும் குணத்திற்காக பெயர் பெற்றுள்ள மருந்தாக லாவெண்டர் உள்ளது. மாதவிடாயின் போது லாவெண்டர் எண்ணெயை வயிற்றில் தடவினால், 10 முதல் 15 நிமிடங்களுக்குள் வலியைக் குறைத்திட முடியும்.

மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் அதிகளவு வெந்நீர் படும் வகையில் வெந்நீர் குளியல் போடவும். இதன் மூலம் அந்த பகுதியின் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.

மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.

சிட்ரஸ் பழங்களை அதிகளவில் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் நாட்களை வலியில்லாத நாட்களாக்கிட முடியும். ஏனவே, சிட்ரஸ் பழங்களை ஜுஸாக்கி குடித்து வலியைக் குறைத்திடுங்கள்

மாதவிடாய் நாட்களில் இரத்தம் குறைவாக இருந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கருப்பையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆபத்பாந்தவனாக பெருஞ்சீரகம் உள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீரில் பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து, நன்றாக கலக்கி, குடிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெற்றிடுங்கள்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வர வேண்டியது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான பெண்கள், குறிப்பாக சோர்வாக இருக்கும் வேளைகளில் அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வதில்லை. இது தவறான அணுகுறையாகும். உடற்பயிற்சி செய்வதன் மூல் அடிவயிற்றுப் பகுதியிலும், உடலின் பிற பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீரடைவதால், வலியை பெருமளவு குறைக்க முடியும்.

போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தால் கூட மாதவிடாய் வலிகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், பெண்கள் அனைவரும் சரிவிகித உணவை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு அரிசியை சாப்பிடுவதன் மூலம் அதில் நிறைந்திருக்கும் பி6 வைட்டமின் பெண்களுக்கு கிடைக்கும், இதன் மூலம் வீக்கங்களைக் குறைத்திட முடியும். மங்கனீசு சத்து நிரம்பியுள்ள வால்நட்ஸ்கள் மற்றும் பரங்கிக்காய்களை சாப்பிடுவதன் மூலம் தசைபிடிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

மாதவிடாய் நாட்களில் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்கு சொல்லுங்கள் மிகப்பெரிய ‘நோ’. ஜங்க் உணவுகளான பர்கர்கள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடாமல் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad