சந்தோஷமாக இருக்க வேண்டுமா? காதலிக்காதீர்கள்…காதலிக்காதீர்கள்

காதலித்துப்பார் உன்னை சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரியும், கவிதைகள் வரும், கையெழுத்து அழகாகும்.
சொர்க்கம், நரகம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்று கிட்டும் இது கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறியது.
ஆனால், காதலிக்காமல் சிங்கிளாக இருந்து பாருங்கள் ஒவ்வொரு நொடியும் சந்தோஷ ஆறு பெருக்கெடுக்கும் இது புது பழமொழி.
உலகில் காதலிப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள் ஒரு ரகம் என்றால், காதலிக்காமல் சிங்கிளாக இருப்பவர்களின் வாழ்க்கை தனி ரகம்.
சிங்கிளாக இருந்தால் கிடைக்கும் சந்தோஷங்கள்
  • சிங்கிளாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக வெளியில் செல்லாம், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஆனால், நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தால், உங்களின் முழு நேரமும் அவர்களுடேனேயே செலவிட வேண்டியிருக்கும், அவர்களுடையே சண்டை போட வேண்டும், அவர்களை சமாதானப்படுத்த வேண்டும், இப்படி உங்கள் உலகம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடும்.
  • செலவுகள் மிச்சமாகும், காதலர்கள் வெளியில் சென்றால், ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும், அவ்வாறு வாங்கிகொடுக்காவிட்டால் சண்டை வரும்.
  • ஆனால், சிங்கிள் வாழ்க்கையில் அப்படி இல்லை, நாமே ராஜா, நாமே மந்திரி. நமக்கு பிடித்ததை வாங்கலாம் சாப்பிடலாம்.
  • இது ஆண்களுக்கு….நீங்கள் யாரை வேண்டுமானாலும் சைட் அடித்துக்கொள்ளலாம், ஆனால் உங்கள் துணையுடன் இருக்கையில் யாரேனும் பெண்ணை ஒரு நாள் சைட் அடித்திருப்பீர்கள், ஆனால் அதற்காக ஒரு வாரத்திற்கு சண்டை போட வேண்டியிருக்கும்.
  • சிங்கிளாக இருந்தால் சுதந்திரமாக இருக்கும், ஆனால் காதலில் விழுந்தால், ஏதேனும் ஒரு பொறுப்பு இருந்துகொண்டே இருக்கும். போன் பேசுவது, ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை,
  • திட்டமிட்ட நாட்களை மாற்ற முடியாமல் திணறுவது என பல தொந்தரவுகள் இருக்கும்.மன நிம்மதி குறைவாகத்தான் இருக்கும், ஏனெனில் எப்படி திருமணம் செய்வது, பணம் செலவளிப்பது என எப்போதும் எதையாவது பற்றி சிந்திக்கொண்டே இருக்க வேண்டும்.
  • ஆக மொத்தத்தில், காதலிப்பவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்கப்போவதில்லை,சிங்கிளாக இருப்பவர்களுக்கு நரகமும் கிடைக்கப்போவதில்லை,
  • சொர்க்கமும், நரகமும் நாம் வாழும் வாழ்க்கை நெறிமுறையில் தான் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad