நேரலை வானொலி நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் பயங்கரமாக சுட்டுக்கொலை! எந்த வானொலி தெரியுமா ?

வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். மற்றையவர் அதை முகநூல் பக்கம் மூலம் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒலிபரப்பு அறைக்குள் புகுந்த மூவர் தொகுப்பாளரைச் சுடத் தொடங்கினர்.

திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தவர் பயந்து அலறத் தொடங்கினார். இதனால், தாக்குதல்தாரிகள் அவர் பக்கம் திரும்பி துப்பாக்கியை இயக்கினர். இதையடுத்து, ஊடகவியலாளர்கள் இருவரும் நிலத்தில் சாய்ந்தனர். குறித்த நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட பெண் ஒருவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய மூவரையும் கைது செய்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad