விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வம்! அதிரடி முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள்!

ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவினால் ஆடிப்போயிருக்கிறது தமிழ்நாடு.

மெரினா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சியை அடுத்து நேற்றைய தினம் அரசியலில் புது புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம் என்று பலரும் பாராட்டிவருகின்றனர்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடமைப்பினால் அப்பல்லோ வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவரின் விசுவாசியான பன்னீர் தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

அந்தப் பதவியில் அவருக்கு அனுபவமும் உண்டு. பன்னீர்செல்வத்தின் மீதான நம்பிக்கையை ஜெயலலிதா பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அ.தி.மு.கவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலம் எஞ்சியிருக்கும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஆயினும் இரண்டு நாட்கள் கழித்து மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென அவர் சென்றிருந்தார்.

இது ஊடகங்களுக்கு மின்னல் வேகத்தில் பறக்க, நாற்பது நிமிடங்களுக்குப் பின்னர் குவிந்த ஊடகவியலாளர்களிடம் தன்னுடைய ஆதங்கத்தை மட்டுமல்ல, அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் குரலாகவும் அவர் நேற்றைய தினம் பேசியிருக்கிறார்.

இது சமூக வலைத்தளங்களில் இருந்தவர்களை மேலும் விறுவிறுப்பாக்கியது. இதற்கிடையில், பன்னீர் செல்வத்திற்கான ஆதரவும், பாராட்டுக்களும் பல தரப்பட்டவர்களிடம் இருந்துவந்து கொண்டிருக்கும், அதேவேளை மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் ஆதரவை பன்னீர்செல்வத்திற்கு கொடுப்பதாக இணையத்தளங்களில் பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் இவ்வளவு காலமும் அமைதி காத்துவந்த பன்னீர்செல்வம் திடீரென தன்னுடைய மௌனத்தைக் கலைத்தமைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியிருந்தன.

அ.தி.மு.க வில் இருக்கும் அமைச்சர்கள், மன்னார்க்குடி குழுவினர் பன்னீர்செல்வத்திற்கு கொடுத்துவந்த நெருக்கடிகள் மாத்திரமல்லாது அவரை பல்வேறு அவமதிப்புக்களை சந்திக்க வைத்திருந்தனர்.

இதனால் தான் மனம் உடைந்ததாக சொல்லிய அவர், அவர்களின் கட்டாயப்படுத்தலினால் தான் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த மௌனத்தைக் கலைத்தமைக்கான காரணங்கள் பல்வேறு இருக்கின்றன. பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற பன்னீர்செல்வத்திற்கு ஒரு தகவலை அவருக்கு நெருங்கி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ இடைவெளியால் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால், தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

சசிகலாவிற்கு எதிரான விமர்சனங்கள் இந்த இரண்டு நாட்களில் சமூக வலைத்தளங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருந்தது. தவிரவும், அ.தி.மு.க வில் இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் சசிகலா தலைமையை ஏற்காத விபரமும் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த தலைமைத்துவ இடைவெளியை பன்னீர் துணிந்து கைப்பற்றுவது சிறந்தது என்ற நம்பிக்கை வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் அந்தத் தரப்பினர். இதனால், தன்னுடைய நீண்ட மௌனத்தைக் கலைத்தார் பன்னீர்.

இதுவொருபுறமிருக்க, சசிகலா மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்தவாரம் வெளிவரவுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவிற்கு பாதகமான முறையில் தீர்ப்பு வரும் என்று உறுதியான தகவலை வழங்கியிருக்கிறார்கள் டெல்லி ஆலோசகர்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை சசிகலா சிறை செல்லநேர்ந்தால் அடுத்து கட்சியின் நிலை என்ன? அது குறித்து சிந்தித்த ஓபிஎஸ் தன்னுடைய திட்டங்களை மிக லாபகமாக வகுத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்த உறுதியான தகவல்களைக் கொண்டும், அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறும், தன்னை முதலமைச்சராக ஆகுமாறும் ஜெயலலிதா குறிப்பிட்டார் என்று போட்டுடைத்தார்.

இதேவேளை அ.தி.மு.க தொண்டர்கள், ஆதரவாளர்களின் மனதை தொடும்விதமாக மிக மதிநுட்பமாக பன்னீர்செல்வம் தன்னுடைய காய்களை நகர்த்தியிருக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் 40 நிமிடங்களுக்கும் மேல் இருந்த பன்னீர், தன்னுடைய மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை என்றும், அம்மா சொன்னவற்றை நான் உங்களிடமும் சொல்கிறேன் என்று சென்டிமென்டாக அட்டாக் பண்ணியிருக்கிறார்.

தமிழகத்தின் புது அத்தியாயத்தை பன்னீர்செல்வம் தொடங்குவதற்கான முதற்படியை எடுத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல்வாதிகள்.

எதுவுமே தெரியாத சசிகலா ஆட்சிப் பொறுப்புக்கு வரத்துடிக்கும் சசிகலாவிற்குப் பதிலாக நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட பன்னீர்செல்வம் முதலமைச்சராக நீடிப்பது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

அதையே தான் தமிழகக் கட்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தவரும் நாட்கள் இன்னும் பரபரப்பாகவே தமிழக அரசியல் நகர்வைக் கொண்டுசெல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மா என்னைப்பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு நீங்களே கேளுங்க
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad