தீயாக பரவும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் நிர்வாணப்படங்கள்!

அமெரிக்க பெண் கடற்படை பெண் அதிகாரிகளின் நிர்வாண போட்டோக்கள் இணைய தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இணையதளத்தில் பரவும் அமெரிக்க கடற்படை பெண் அதிகாரிகள் நிர்வாண போட்டோக்கள் நியூயார்க்: அமெரிக்க கடற்படையில் பெண்கள் பிரிவு உள்ளது.

இங்கு பணிபுரியும் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் நிர்வாண போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவின. அவற்றில் மூத்த பெண் அதிகாரிகளின் போட்டோக்களும் அடங்கும். போட்டோக்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இச்சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க கடற்படை கார்ப்பரேசனின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என தெரியவில்லை. இச்சம்பவத்தில் எத்தனை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற தெளிவான விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு ஆண்டறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 2015-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் இருந்து 6 ஆயிரம் ‘செக்ஸ்’ புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு ஜனநாயக கட்சி எம்.பி. ஆடம் சுமித் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல் கடற்படை வீராங்கனைகளின் மதிப்பு, மரியாதைக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும், இதை ஒருபோதும் ஏற்க இயலாது என கூறியுள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad