ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம். 2 மாதம் கர்ப்பம் ஆன சிறுமி.

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததில் 2 மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அருகே பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்தவர் ரஹூம்(24). இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகளான 14 வயது சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று ரஹூம் திருமணத்துக்கு பெண் கேட்டுள்ளார். அவரிடம் தனது மகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை காத்திருக்கும்படி சிறமியின் பெற்றோர் கூறி அனுப்பியுள்ளனர். 

இதற்கிடையே அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரஹூம் பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, பரிசோதித்த போது சிறுமி 2 மாத கர்ப்பணியாக இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த கர்ப்பத்தை கலைக்க கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்ததில், அவரை ரஹூம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாக தெரியவந்தது. 

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும்  புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நேற்று ரஹூமை போக்சோவில்  கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad