21 வயது கீர்த்திகா தூக்கிட்டு தற்கொலை.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் 30 ஏக்கர் பகுதியில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தம்பிலுவில் இளங்கோ வீதியில் பெரியம்மாவின் அரவணைப்பில் வசித்து வந்த சந்திரமோகன் கீர்த்திகா எனும் யுவதியே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த யுவதியின் பெற்றோர் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வருகின்றனர் . குறித்த யுவதியும் அவரது தங்கையும் அம்மாவின் சகோதரியின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளனர் .

இன்று காலை இறந்த யுவதியின் தங்கை அறையினை திறந்து பார்த்த போது தனது அக்கா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.திலகரத்ன மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

காதல் விவகாரமாக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது .


Tags

Top Post Ad

Below Post Ad