யாழிற்கு இனிமேல் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். 7 இல்லை.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அடிப்படையில், வாக்காளர்களால் தெரிவு செய்யப்படக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க, நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடியது.

இதில், யாழ் மாவட்ட 2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி நாடாளுமன்ற ஆசனமொன்றை குறைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, யாழ் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசனம், வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 18 உறுப்பினர்கள் தெரிவாகும் நிலையில், அந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad