கோவிலுக்கு முன் கோழி விற்பனை அனுமதிப் பத்திரம் பறிமுதல்

வவுனியா, குட்செட் வீதியில் ஆலயம் முன்பாக வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனையில் ஈடுபட்டவரின் பயணத்தடைக் கால அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (12) மதியம் இடம்பெற்றது.

மேலும் பயணத்தடைக் காலப்பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்று கோழி இறைச்சி விற்பனை செய்வதாக பிரதேச செயலகம் ஊடாக பெறப்பட்ட அனுமதியை வைத்து வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற பொலிஸார் பயணத் தடைக் காலத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று கோழி விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக சுகாதாரப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad