சுமார் நான்கு வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு மதுபானத்தை குடிக்கக் குடுத்த வீடியோ ஒன்று நேற்றைய தினம் சமூக வலைகளில் பரவலாகி பலரின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாட்டின் சட்டப்படி 18 வயது குறைந்த ஒருவருக்கு மதுபானம் புகைத்தல் தொடர்பான பொருட்களையோ வழங்குவது, விற்பது குற்றமாகும்
இச்சம்பவம் தொடர்பில் பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் உள்ளார்.