18ஆண்களின் ஆணுறுப்பை அகற்றி கொலை செய்த மருத்துவர்!சிரியா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு சுமார் 18 பேர் வரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், தற்போது அவர் ஜேர்மனியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு, சிரியாவில் சிரிய அதிபர்பஷார் அல் அசாதுக்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கியபோது, எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அப்போது Alla Mousa என்ற மருத்துவர் ஒருவர், சிரியாவிலுள்ள Homs நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில், ஒரு பதின்ம வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் ஆகியோரின் ஆணுறுப்புகளில் ஆல்கஹாலை ஊற்றி தனது லைட்டரால் தீவைத்து கொளுத்தியிருக்கிறார்.

அதே மருத்துவமனையில் மேலும் 9 பேரை அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கிறார் Mousa. அவர் செய்த கொடுமைகள் எழுத்தால் எழுத முடியாத அளவுக்கு கொடூரமாக உள்ளன.

வலிப்பு வந்து துடித்த ஒருவரை மிதி மிதியென மிதித்திருக்கிறார். சில நாட்கள் கழித்து அவருக்கு ஏதோ ஒரு மருந்தை அவர் கொடுக்க அவர் இறந்துபோயிருக்கிறார்.

பெரிய காயம் ஒன்றால் அவதியுற்ற ஒருவரின் காயத்தில் மிதித்ததுடன், அந்த காயத்திலேயே ஸ்பிரிட்டை ஊற்றி கொளுத்தியிருக்கிறார் Mousa. ஒருமுறை ஒருவரை Mousa பலமாக மிதிக்க, வலி தாங்க முடியாத அந்த நபர் Mousaவை திருப்பி மிதித்திருக்கிறார்.

உடனே மற்றொரு ஆண் செவிலியருடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்த Mousa, விஷ ஊசி போட்டு அவரைக் கொன்றிருக்கிறார். மேலும் டமாஸ்கஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஏராளமானோரை பாலியல் துஷ்பிரயோகமும் செய்துள்ளார் Mousa. பிறகு 2015இல் ஜேர்மனிக்கு வந்த Mousa, எதுவும் தெரியாததுபோல மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

தற்போது உண்மைகள் தெரியவந்த நிலையில், அவர் மீது 18 சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் நடந்த மனித இனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சிரியாவுக்கு வெளியே விசாரிக்கப்படத் துவங்கியுள்ள நிலையில், Eyad Al-Gharib என்பவர் விசாரிக்கப்பட்டு நான்கரையாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தற்போது, இரண்டாவது நபராக Alla Mousa விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad