திருமணத்தின் பின் ஏற்பட்ட தொடர்பு-கணவனை கொலை செய்த மனைவி!

 


தமிழகத்தில் தாலி கட்டிய கணவனை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். 53 வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

தாரா என்பவருக்கும் அன்பழகனுக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் தாராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவனை பிரிந்து மணவாளன் நகரில் மகனுடன் வசித்து வருகிறார். முதல் மனைவியின் அனுமதியுடன் சிவபுரம் பகுதியை சேரந்த ஷோபனாவை (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகன் திருமணம் செய்தார்.

அன்பழகன், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியில் வீடு கட்டி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அன்பழகனோட தாய் முனியம்மாள் இறந்தார். அதன் பிறகு சிவபுரத்துக்கு வந்து தாயின் இறுதி கடமைகளை அன்பழகன் செய்தார். அப்போது கொரோனா லாக் டவுன் நடைமுறைக்கு வந்ததால் சிவபுரத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தர்மராஜூவுக்கும் ஷோபனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

இது அன்பழகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தர்மராஜுவை வீட்டுக்கு வரக்கூடாது என்று அன்பழகன் கூறியுள்ளார்.

இதனால் தர்மராஜும் ஷோபனாவும் அன்பழகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 22ம் திகதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே அன்பழகன் கட்டிலில் படித்திருந்த போது தர்மராஜ் அன்பழகனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறம் கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் திகதி முதல் அன்பழகனை காணவில்லை என நாடகமாடிய மனைவி ஷோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் ஷோபனாவும் மாயமானார். இதையடுத்து அன்பழகன் உறவினர்கள் அவரை கண்டுபிடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிசார் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையில், அரக்கோணத்தில் உள்ள லாட்ஜில் ஷோபனா தங்கியிருப்பது தெரியவந்தது.

லாட்ஜுக்கு பொலிசார் சென்றபோது ஷோபனா தர்மராஜுடன் தங்கியிருந்தார். இரண்டு பேரையும் விசாரிக்கும்போது தான் மேலே கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ஷோபனா, தர்மராஜ், கொலைக்கு உதவிய தர்மராஜின் நண்பன் விக்னேஷ் (23) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர் 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad