4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

 


தமிழகத்தில் காதலனுக்காக மனைவி குழந்தையை துடி துடிக்க கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக். தற்போது 31 வயதாகும் இவருக்கும், 22 வயதாகும் அபர்ணா என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் அழகான ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பின்னர் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அபர்ணா குழந்தையுடன் நாகையில் இருந்து வந்தார். இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (24) என்பவரின் பழக்கம் கிடைக்க, இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இது போன்ற நிலையில், கடந்த திங்கட் கிழமை, நாகை பொலிசாருக்கு கார்த்திக், தனது குழந்தையை மனைவி கொலை செய்துவிட்டதாக கதறியுள்ளார். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அபர்ணாவை பிடித்து விசாரித்துள்ளனர்,

அப்போது காதலனைப் பற்றியும் தெரியவர, இருவரிடமும் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சம்பவ தினத்தன்று இருவரும் நெருக்கமாக இருந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.

இதன் காரணமாக கோபமடைந்த சுரேஷ் குழந்தையை அடிக்க, குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது.

உடனே, அபர்ணா குழந்தையின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். அவர் நாகை காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார். தொடர்ந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிசார் அபர்ணாவையும், சுரேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad