குடும்ப தகராறில் 3 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தயாளன். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், கீர்த்தி(6), ஹரிதா(3) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான தயாளன் வீட்டில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்த நிலையில், சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த வெண்ணிலா, நள்ளிரவில் மகள் ஹரிதாவை தூக்கிச்சென்று வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு கொலைசெய்து, பின்பு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிகாலை தாயும், மகளும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.