காதலியை சுட்டுக் கொலை செய்த காதலர்!

 


கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் 24 வயதான மானசா. எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். இதற்காக கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார்.

ஒருமாத காலமாக காத்திருந்து திட்டமிட்டு மருத்துவமாணவியை அவரது காதலர் சுட்டுக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் 24 வயதான மானசா. எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். இதற்காக கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் ராகில் என்பவரை மானசா காதலித்துள்ளார். அவர் நடவடிக்கைகள் பிடிக்காததால், பேசுவதை மானசா நிறுத்திவிட்டார். ஆனால், மானசாவின் காதலை, ராகிலால் விட முடியவில்லை. அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மானசா பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ராகில், மானசா தங்கியிருந்த வீட்டுக்கு அருகிலேயே ஒரு மாதத்துக்கு முன் வாடகைக்கு அறை எடுத்திருக்கிறார். அங்கிருந்தபடியே, மானசாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக் கிழமை சக நண்பர்களுடன் மானசா சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தார். அப்போது அங்கு வந்த ராகில், மானசாவிடம் பேச முயன்றுள்ளார். மானசா விரும்பாத தால், திடீரென்று அவர் கையை பிடித்த ராகில், அறைக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டினார். உடன் இருந்தவர்கள் கதவைத் திறக்குமாறு கத்தியும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் இருவரும் பிணமாகக் கிடந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மானசாவின் உடலில் இரண்டு குண்டுகளும் ராகில் உடலில் இரண்டு குண்டுகளும் பாய்ந்துள்ளன.

அவர் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருக்கும் ராகில், ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவர் பிரிந்ததை அடுத்து, மானசாவை காதலித்ததாக வும் கூறப்படுகிறது. தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறியில், அவர் இப்படி செய்ததாகக் கூறுகின்றனர். நேற்று நடந்த சம்பவத்திற்கு இப்போது காரணம் தெரிய வந்துள்ளது.