4 வயது மகனின் கழுத்தை இறுக்கி கொன்ற தாய்-திடுக்கிடும் தகவல்கள்!

 


தமிழகத்தில் பெற்ற மகனை படுகொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31).

இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபர்ணா(22) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கவிதிரன் என்ற மகன் இருக்கிறார், திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட, உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அபர்ணாவுக்கும், ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கணவன்- மனைவி போல இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் அவசர போலீசை தொடர்பு கொண்ட கார்த்திக், தன்னுடைய மனைவி மகனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த தினத்தன்று அபர்ணா- சூர்யா இருவரும்  தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது கவிதிரன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார், இதனால் ஆத்திரத்தில் சூர்யாக கவிதிரனை தள்ளிவிட்டுள்ளார்.

அபர்ணாவோ சுடிதார் துப்பட்டாவால் மகனின் கழுத்தை நெறித்துள்ளார், இதில் சிறுவன் துடிதுடித்து இறந்துள்ளான்.

கொலையை மறைப்பதற்கான தன் மகன் எதிர்பாராதவிதமாக இறந்தவிட்டதாக கூறி புதைத்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சென்னையில் வசித்து வந்த கார்த்திக்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக்காதலன் சுரேசையும் நேற்று கைது செய்தனர்.

சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad