பொறாமை காரர்களிடம் இருந்து தன்னுடையதை பாதுகாக்க விவசாய நிலத்தில் சன்னி லியோனின் படங்கள் வைத்த விவசாயி!

தனது விவசாய செய்கையின் மீது பொறாமைப்பட்டு, யாருடைய கெட்ட பார்வையும் படக் கூடாது என்பதற்காக தோட்டத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெரியளவிலான கவர்ச்சிப் படத்தை விவசாயியொருவர் வைத்துள்ளார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. 

காய்கறி தோட்டத்தின் பச்சை பின்னணியில் சிவப்பு நிற பிகினியில் சன்னி லியோனின் பெரிய அளவிலான படம் வைக்கப்பட்டுள்ளது.

45 வயதான அங்கினபள்ளி செஞ்சு ரெட்டி என்பவர், தனது பண்ணையில் நடிகையின் இரண்டு பெரிய சுவரொட்டிகளை நிறுவியிருந்தார்,

‘ஏய், என்னைப் பற்றி அழவோ பொறாமைப்படவோ வேண்டாம்!’ என அதில் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து அந்த விவசாயி தெரிவிக்கையில், இந்த ஆண்டு, 10 ஏக்கரில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளேன். நல்ல விளைச்சல். இது கிராமவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் தேவையற்ற கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர்களின் தீய பார்வையை தடுக்க, சன்னி லியோனின் பெரிய அளவிலான படத்தை நிறுவியுள்ளேன். இந்த தந்திரம் வேலை செய்தது. இப்போது என் பயிரை யாரும் பார்ப்பதில்லை.’ என தெரிவித்துள்ளார்.