யாழில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

 


யாழ். நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் இன்று அதிகாலை தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உயிரிழந்த நபர் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மரண விசாரணையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.