போதையால் திசை மாறிய பிரபல நடிகை!

 


ஜெயம் ரவியின் அறிமுகப் படமான ஜெயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா.

இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் சதா நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.  ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் டார்ச்லைட் என்னும் படத்தில் விலைமாது வேடத்தில் நடித்திருந்தார்.தொடர் தோல்வி படங்கள் காரணமாக சினிமாவிலிருந்து சதா ஒதுக்கப்பட்டார்.

இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்.

மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு, “திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை” என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சதா குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், “சதா கையில் சிகரெட்டுடன் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். எப்போதும் போதை பழக்கம் உடையவராக இருந்ததால் சினிமாவை விட்டு ஓடிவிட்டார்” என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.