வீடியோ - பஸ்சை வழிமறித்து சாரதி, நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல்.


கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று (09) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர், இ.போ.சபை பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான இ.போ.சபை பேருந்து, கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது. அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.

இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கரடிபோக்கு பகுதியினை இ.போ.சபை பேருந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர், இ.போ.சபை பேருந்தின் நடத்துனர், சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகிய இ.போ.சபை சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இ.போ.ச பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் மீது தனியார் துறையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த போக்கிற்கு முற்றுப்புள்ளியிடும் விதமாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தனியார் துறையினர் மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.