போலீஸ் எனக்கூறி யாழ் பழக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த காவாலிகள்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள பழக்கடை ஒன்றின் வியாபாரியை பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி பொலிஸ் என தன்னை அடையாளப்படுத்திய இருவர் பழக்கடை வியாபாரி ஒருவரை ஏமாற்றி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும் அதிகமான பணத்தை கப்பமாகப் பெற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.டீ.வி கெமராவின் பதிவைப் பெற்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இருவரை இனங்கண்டு பழக்கடை வியாபாரிகளிடம் ஒளிப்படங்களை வழங்கி எங்கு கண்டாலும் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

5 ஆம் திகதி பிற்பகல் 2.40 மணியளவில் இருவரில் ஒருவர் பேருந்து நிலையத்துக்குள் வந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவலை வழங்கியிருந்தார்கள். அவர்கள் வரும்பொழுது சந்தேக நபர் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டார்.

சந்தேக நபரைப் பொறுப்பேற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரிடம் யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கீரிமலை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. மற்றைய சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad