அதிக பேருக்கு அன்னதானம். சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது

கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால், இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.

மேலும் ஆலயப் பகுதிகளிலுள்ள கடைகளில் உள்ளோர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா, நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad