60 முதல் 80 வயதான பெண்களை மட்டுமே குறிவைக்கும் சைக்கோ- கொலை செய்த பின்னர் வல்லுறவு

60 முதல் 80 வயதான பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்கி அப்பெண்கள் மயக்கத்தில் இருக்கும்போது அல்லது இறந்த பின்னர் அவர்களுடன் பாலியல் வல்லுறவு செய்யும் சைக்கோ வாலிபர் போலீசில் சிக்கியிருக்கிறார் .

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மனைவி சரோஜா. 80 வயதான இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள மற்ற அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில், சரோஜாவும் பூங்காவனம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். இதை அறிந்து கொண்ட மர்மநபர் வீட்டில் புகுந்து சரோஜாவையும் பூங்காவனத்தையும் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்களிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்.

தாய்-மகள் இருவரின் பிரேத பரிசோதனையில் அவர்கள் கொலை செய்யப்பட்டு பின்னர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையும் திருவெண்ணைநல்லூரில் நான்கு வருடங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட இடத்தில் கிடைத்த கைரேகையும் ஒன்றாக இருந்ததால் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த வழக்கில் திருவெண்ணைநல்லூர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கவிதாஸ் என்பவர் என்பதால் அவர் கலித்திறாம்பட்டு அருகே உள்ள சூளையில் ஜேசிபி ஓட்டுனராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தன.ர் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சரோஜா -பூங்காவனம் தாய் மகள் இருவரையும் தடியால் தாக்கி அவர்களிடம் இருந்து எட்டு கிராம் நகையை கொள்ளையடித்து கொலை செய்ததையும், அவர்கள் உயிரிழந்த பின்னர் சடலத்துடன் பாலியல் உறவு வைத்து கொண்டு அதன் பின்னர் தப்பிச்சென்றதையும் தெரிந்து சொல்லி இருக்கிறார்.

இந்த குற்றவாளி வயதான பெண்களை நோட்டம் விட்டு அவர்களை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையடித்து அவர்கள் மயக்க நிலையில் இருக்கும்போது அல்லது இறந்த பின்னர் பாலியல் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் குணம் உடையவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்தகால வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஆண்டு இறுதியில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் கவிதாஸ்தான் அந்த கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் வல்லுறவு வழக்கும், சேலம் மாவட்டத்தில் இரண்டு கொலை, கொள்ளை வழக்கிலும் கவிதாஸ் தொடர்புடையவர் என்பது தெரியவந்திருக்கிறது.

கவிதாஸ்க்கு மது குடித்துவிட்டால் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற மனநிலை வந்துவிடுகிறதாம். அதற்கு வீட்டில் தனியாக இருக்கும் அதுவும் மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad