இரண்டு காதலர்களுடன் சேர்ந்து மூன்றாவது காதலனை தீர்த்துக்கட்டிய பெண்

அந்தப் பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்த பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது அப்பெண்ணுக்கு வேறு இரண்டு ஆண்களுடன் தொடர்பு இருக்கும் விசயம். இதை தட்டி கேட்டதால் தொடர்ந்து இது குறித்து பேசி தகராறு செய்து வந்ததால் மற்ற இரண்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூன்றாவது கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டி இருக்கிறார் அப்பெண்.

ஆந்திர மாநில குண்டூர் பகுதியை சேர்ந்தவர் நாக மல்லேஸ்வரி. இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே கணவர் இறந்துவிட உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். அதன்பின்னர் தனது வயிற்றுப் பசிக்காக ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

கடப்பாவை சேர்ந்த லாரி கிளீனர் பாஷா என்பவர் வீட்டை விட்டு வெளியேறி குண்டூர் பகுதிக்கு வந்திருக்கிறார். ஊரடங்கு சமயம் என்பதால் வேலை தேடி அலைந்தவருக்கு பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஓட்டலில் வேலை கிடைத்திருக்கிறது. அங்குதான் நாகமல்லேஸ்வரி வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறி இருக்கிறது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுவபத்து வந்துள்ளனர். அதன்பின்னர் இவரும் வீடு பிடித்து ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய போது தான் நாகமல்லேஸ்வரியின் உண்மை முகம் பாஷாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

மகேஸ்வரிக்கு மேலும் இரண்டு ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை நேரே கண்டித்திருக்கிறார். ஆனால் நாகமல்லேஸ்வரி அந்த இரண்டு பேரையும் கைவிட மறுத்து விட்டதால் பாஷாவுக்கு கோபம் தலைக்கு ஏறி தொடர்ந்து தகராறு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற இரண்டு கள்ளக்காதலர்கள் சுப்பாராவ் , அமைரா ஆகியோரிடம் சொல்லி தீர்த்துவிட முடிவு எடுத்திருக்கிறார் .

அதன்படி கடந்த 3 ஆம் தேதியன்று ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் பாஷாவுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். காலையில் அப்பக்கமாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். பழகி வந்த நாளில் திடீரென்று தலைமறைவாகி விட்டதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது அவரை பிடித்து விசாரித்தபோது தான் மற்றும் 2 ஆண் நண்பர்கள் சிக்கி இருக்கிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad