நோய்வாய்ப்பட்ட கணவர்…. “கருணைக்கொலைக்கு கெஞ்சிய மனைவி”….. வசமாக சிக்கிய மருத்துவர்….!!

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை அமைப்பான Exit அமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற மருத்துவருமான Pierre Beck என்பவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கருணை கொலைக்காக வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி “என் கணவர் இல்லாத இந்த உலகில் எனக்கும் வாழ விருப்பமில்லை” என்று கூறி தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர் Pierre Beck-யிடம் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உயிரை விடுவதற்கு மருத்துவர் Pierre Beck உதவியுள்ளார்.

அதாவது மருத்துவர் Pierre Beck 86 வயதாகும் அந்த பெண்ணுக்கு அதிக அளவில் மயக்க மருந்து ஒன்றை கொடுத்து உயிரை விடுவதற்கு உதவி செய்துள்ளார். ஆனால் உடல் ரீதியாக அந்த பெண்ணிற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை அவர் ஆரோக்கியமாக தான் இருந்துள்ளார். இருப்பினும் மருந்து பொருட்கள் தொடர்பான பெடரல் சட்டத்தை மருத்துவர் Pierre Beck மீறிவிட்டார் என்று கூறி அவருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையும் கேட்டிருக்க வேண்டும், தானாகவே அந்த முடிவினை அவர் எடுத்திருக்க கூடாது என்ற விவாதமும் முன்வைக்கப்பட்டது. இந்த சிக்கலான வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது lausanne உள்ள பெடரல் நீதிமன்றத்திற்கு அந்த தீர்ப்பு நேற்று மாற்றி விடப்பட்டது. அப்போது அந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஒருவிதமாகவும், மற்ற இருவர் வேறு விதமாகவும் முடிவெடுத்துள்ளனர்.

அதாவது நீதிபதிகளில் மூவர் மருத்துவர் Pierre Beck மருந்து பொருட்கள் தொடர்பான பெடரல் சட்டத்தின் படி குற்றவாளி அல்ல என்று கூறியுள்ளனர். இருப்பினும் Psychotropic Substances வகை மருந்து பொருள்கள் மற்றும் போதையை ஏற்படுத்தும் மருந்து பொருட்கள் குறித்த பெடரல் சட்டத்தின் படி நீதிபதிகள் அந்த வழக்கினை மீண்டும் ஜெனிவா மாகாண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண்ணை தற்கொலைக்கு அனுமதிப்பதா ? அவருடைய கணவருடனே உயிர் துறக்க அனுமதிப்பதா ? என்று யோசித்த பிறகே அந்த பெண்ணை கருணைக்கொலை செய்வதே சிறந்த முடிவு என்று தீர்மானித்ததாக மருத்துவர் Pierre Beck தெரிவித்துள்ளார். அதேபோல் மீண்டும் இதே முடிவை எடுக்க நேரிட்டாலும் கட்டாயம் செய்வேன். ஆனால் அதற்கு முன்பாக மற்ற மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்பேன் என்று Pierre Beck கூறியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad