ரயிலை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து கராச்சிக்கு இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலின் ஓட்டுனர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென கானா ரயில் நிலையத்தின் அருகில் ரயிலை நிறுத்தி விட்டு தயிர் பால் வாங்கி வந்துள்ளார். அதன்பிறகு அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரயிலை இயக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியை ரயிலில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 இதையடுத்து சம்பந்தபட்ட ரயில் ஓட்டுநரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் ரயிலில் உதவியாளரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் கூறியது, நாட்டின் சொத்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இதற்கு முன்பாக இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. இனி எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.