மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒரு புதுமையான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அங்கு Jassiel Shelter என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பானது செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு கிறிஸ்துமஸ் தாத்தாவை ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளது.
அவரைக் கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். மேலும் அங்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.