விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தை…. 20 வயது பெண் கைது…. நடந்தது என்ன…?

ஜனவரி 1ஆம் தேதி மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்நிலையில் விமானம் நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்த போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அந்த குழந்தையை பிரசவித்தாகாக சந்தேகிக்கப்படும் 20 வயது மடகாஸ்கரை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். முதலில் அந்த பெண் குழந்தையை தான் பெற்றெடுக்கவில்லை என கூறினார். பின்பு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தையை பெற்றது அவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டது.