ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிடம் கொடுத்த பிள்ளை- இன்றுவரை காபூலில் இருந்த மாயம்- கண்டு பிடித்த தந்தை…

ஆப்கான் நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேறியவேளை. அமெரிக்காவுக்கு உதவிய பலரை ராணுவம் கூட்டிச் செல்வதாக கதைகள் பரவியது. இதனை அடுத்து பலர் புறப்பட்டு விமான நிலையத்தை முற்றுகையிட்டார்கள். இதில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை, ஒரு தகப்பன் அமெரிக்க துருப்புகளிடம் கொடுத்தார். பிள்ளையை அமெரிக்கா கொண்டு சென்று விடுங்கள், ஆப்கான் நாட்டில் அவன் இருந்தால், அவனை தலிபான்கள் கொன்றுவிடுவார்கள் என்று கெஞ்சினார் அப்பா. இதனை அடுத்து பிள்ளையை மட்டும் அமெரிக்க ராணுவத்தினர் வாங்கினார்கள். ஆனால் கடைசி வரை அந்தப் பிள்ளை அமெரிக்கா செல்லவே இல்லை. இதில் பிள்ளை வேறு காணமல் போய் விட்டது. ராணுவத்தை கேட்டால் பிள்ளை தம்மிடம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இன் நிலையில் 4 மாதங்கள் கழித்து, ஜனவரி மாதம் 8ம் திகதி குறித்த பிள்ளை அப்பாவுடன் இணைந்துள்ளது. தலை நகர் காபூலில்…

ஒருவரிடம் அந்தப் பிள்ளை இது நாள் வரை இருந்துள்ளது. இறுதியாக அவர் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்துள்ளார். ஆக மொத்தத்தில், அமெரிக்க படைகள் பல நூறு ஆப்கான் நாட்டவர்களை இது போல தாம் அமெரிக்கா ஏற்றிச் செல்வதாக கூறி விட்டு. கடைசியில் நட்டாத்தில் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதே உண்மை. அதற்கு இந்தப் பிள்ளையே மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad