முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்பு. சிசுவின் எச்சங்கள் மீட்பு.

முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று (23:12:22) குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் எச்சங்களை பார்வையிட்டுள்ளார்.

எச்சங்களை பார்வையிட்ட சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு ஒன்றின் மூலம் சம்பவத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சிசுவின் மண்டை ஓடு, மற்றும் என்புகள், சுற்றப்பட்டிருந்ந துணிகள் மீட்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பில் ஐயங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.