யாழில் பெண் வங்கி அதிகாரியுடன் கள்ளக்காதல்!! கணவனிடம் பிடிபட்ட கள்ளக்காதலன் தப்பி ஓட்டம்!!

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வங்கி ஒன்றில் கடமையாற்றும் தன்னிலும் விட 5 வயது கூடிய குடும்பப் பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருந்த வங்கி ஊழியரான இளைஞன் தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.யாழில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரி நிலையில் கடமையாற்றும் பெண் ஒருவர் அதே வங்கியில் இன்னொரு கிளையில் கடமையாற்றும் இளைஞன் ஒருவனுடன் பாலியல் உறவில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் வெளிமாவட்டம் ஒன்றில் பிரபல நிறுவனம் ஒன்றின் அதிகாரியாவர். இருவரும் திருமணம் முடித்து பல வருடங்கள் ஆனா நிலையில் தற்போது குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரசவ லீவில் பெண்அதிகாரி வீட்டில் இருந்த போதும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு கள்ளக்காதலனான வங்கி ஊழியர் கணவன் இல்லாத வேளைகளில் வந்து சென்றவண்ணம் இருந்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் சகோதரியின் வீட்டில் கணவனின் வயதான தாயுடனேயே குறித்த பெண் அதிகாரி வசித்து வந்துள்ளார். தனது மகன் இல்லாத நேரங்களில் தனது மருமகளிடம் வரும் குறித்த இளைஞன் தொடர்பாக சந்தேகமடைந்த மாமியார் இது தொடர்பாக மருமகளை விசாரித்துள்ளார்.வங்கி நடவடிக்கைகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக குறித்த இளைஞன் வருவதாக மருமகள் தெரிவித்துள்ளார்.தனது மருமகளிடம் வரும் இளைஞன் தொடர்பாக தனது மகனுக்கு தாய் தெரிவித்துள்ளார். சனி, ஞாயிறு தினங்கள் மட்டுமே மகன் வீட்டில் தங்கியிருப்பதால் தனது தாயாரின் தகவலையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் தனது மனைவியிடம் வரும் இளைஞனின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கண்காணிப்பதற்காக தனது மனைவி மற்றும் தாய் ஆகியோர் அறியாத வகையில் ஒன்லைன் கமராக்கள் சிலவற்றை வீட்டில் பூட்டி தனது கைத்தொலைபேசி மூலம் கண்காணித்து வந்துள்ளார் கணவன்.

இதன் போதே தனது மனைவியுடன் நட்பு ரீதியில் அல்லாது அந்தரங்க உறவைப் பேணும் அளவுக்கு இளைஞனின் நடவடிக்கைகள் இருந்துள்ளதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் கணவன்.தனது தாயார் கோவிலுக்கு செல்லும் மாலை வேளைகளில் குறித்த இளைஞன் தனது வீட்டுக்கு வந்து படுக்கை அறைக்குள் இருக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் கணவன். அதன் பின்னர் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து கணவன் தனது மனைவியை குழந்தையுடன் தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரியவருகின்றது.உ்டனடியாகவே தனது குழந்தை மற்றும் பொருட்களுடன் குறித்த வங்கி ஊழியனான கள்ளக்காதலனின் காரை வரவழைத்து அவனுடன் கணவனின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் குறித்த பெண் அதிகாரி.

பெண் அதிகாரி முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியை சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் பெற்றோர் மற்றும் சகோதரர்களை யுத்ததில் இழந்தவர் எனவும் தெரியவருகின்றது. கணவனை விட்டு தனது கைக்குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் வெளியேறி அரியாலைப் பகுதியில் வசித்து வந்த கள்ளக்காதலனான இளைஞனின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் குடியேறியுள்ளார் வங்கி அதிகாரி. கணவனை விட்டு பிரிந்து 5 நாட்கள் யாழில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பின்னரே இளைஞன் குறித்த வீட்டை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வங்கி ஊழியரான இளைஞனுக்கும் குறித்த வங்கி அதிகாரியான பெண்ணுக்கும் அந்தரங்க தொடர்பு இருப்பதை இளைஞனின் உறவுகள் அறிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.தான் நட்பு ரீதியாகவே பழகி வருவதாக இளைஞன் கூறியும் அவற்றை கேட்காது குறித்த பெண்ணுடனான தொடர்பை முறிக்கும் படி கூறியதுடன் இளைஞனுக்கு திருமணம் பேசத் தொடங்கியதாக தெரியவருகின்றது. ஏற்கனவே இளைஞன் பாடசாலை காலத்தில் ஒரு மாணவியுடன் பாலியல்உறவில் ஈடுபட்டு சிக்கல்பட்டவர் என இளைஞனின் நட்புககள் வட்டத்திலிருந்து தகவல்கள் கசிந்திருந்தன.

இந் நிலையில் தனது கள்ளக்காதலிக்கும் தெரியாது வங்கி ஊழியரான இளைஞன் திடீரென புலம்பெயர் நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டதாக தெரியவருகின்றது. இதனையடுத்து இளைஞனின் வீட்டுக்குச் சென்ற வங்கி அதிகாரியான கள்ளக்காதலி குறித்த இளைஞன் தன்னை விட்டுவிட்டு தனக்கு தெரியாது வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தனது குழந்தை அவனுக்கே பிறந்ததாகவும் கூறி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியபடி உள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad