காதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகளும் அதற்கான சுவாரஸ்யமான பதில்களும்

பெண்களால் கேள்விகள் கேட்காமல் இருக்கவே முடியாது. பொதுவாக காதலன் அவனது நண்பர்களுடன் எங்காவது வெளியே சென்று வந்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அவன் என்ன செய்தான், எங்கு போனான் என அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் இயல்பு.
அந்த வகையில், தான் காதலிக்கும் ஆணிடம் பெண்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என பொதுவாக ஒரு பட்டியல் இருக்கிறது. சிலவன சாதாரண கேள்விகள் தான் ஆனால், பதிலை யோசித்துக் கூறும்படி இருக்கும். சிலவன எடக்கு மடக்கான கேள்விகளாகவும் இருக்கின்றன.
நான் இல்லாத போது நீ போக விரும்பும் இடம்? 
நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த இடத்தை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், கடைசியில் நீயும் உடன் இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும் என்பது போல கூறி முடித்துவிடுங்கள். (பயபுள்ள மனசு குளுந்து போகும்-யா)
குழந்தைகள் பிடிக்குமா? 
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பிடிக்கும் என்றே கூறுங்கள், ஏனெனில், பெரும்பாலான பெண்களுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். இதற்கு துணைக் கேள்வியாக ஆணா, பெண்ணா? என்றும் கேட்பார்கள்.
சமைக்க பிடிக்குமா? 
சமைக்க பிடிக்குமா என்று கேட்டால் தெரியாது என கண்ணை மூடிக் கொண்டு கூறிவிடுங்கள். இதனால் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று என்றாவது சர்ப்ரைஸாக சமைத்து அசத்த முடியும், மற்றொன்று அவர்கள் சமைக்க கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் நிறைய கிடைக்கும்.
டேட்டிங் பற்றிய உனது கருத்து? 
மேல்நாட்டு பெண்கள், மேற்கத்தியம் விரும்பும் நம்நாட்டு பெண்களில் ஒருசிலரை தவிர பெரும்பாலான பெண்களுக்கு டேட்டிங்கில் பெரிதாக நாட்டம் இருக்காது. இந்த கேள்வி நீங்கள் எப்படிப்பட்டவர் என தெரிந்துக் கொள்ள கேட்கப்படும் கேள்வி எனவே உஷாரய்யா உஷாரு!!!
ஓர் பெண் சிறந்தவள் என்று எதை வைத்து நீ கூறுவாய்? 
அடக்க ஒடுக்கம் என பழைய பதில்களை கூறி வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். தைரியம், சுதந்திரம், தனித்தன்மை என புதியதாக கூறி தப்பித்துக் கொள்ளுங்கள்.
திடீரென நிறைய பணம் கிடைத்தால், எனக்கு என்ன வாங்கி தருவாய்? 
கண்டிப்பாக எதையும் குறிப்பிட்டு கூற வேண்டாம். நீ கேட்பதை, உனக்காக எதை வேண்டுமானாலும் என்பது போல பொதுவான பதில்களை கூறி சமாளித்துவிடுங்கள். சில பெண்களுக்கு அதிக செலவு செய்வது பிடிக்கும், சில பெண்களுக்கு செலவு செய்வது பிடிக்காது. (நமக்கு எதுக்கு சாமி வம்பு, பொதுவா இருந்துட்டு போயிடலாம்.)
உன்னிடம் இருக்கும் கேட்ட பழக்கம் என்ன? 
முன்கூட்டியே அவர்களுக்கே தெரிந்த பதிலை கூறிவிடுங்கள். புதியதாக கூறி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
இருபது வருடம் கழித்து என்னைப் பற்றி நீ என்ன நினைப்பாய்? 
இப்போது போலவே அன்றும் உன்னை காதலித்துக் கொண்டு தான் இருப்பேன். இன்னும் உன்மேல் அதிக அன்பு செலுத்த இரண்டு குழந்தைகளும் உடனிருக்கும் என நாலைந்து பிட்டுகளை அடித்துவிடுங்கள். அப்போ யோசிப்போம், இப்போ எதுக்கு என எடக்கு மடக்காக பதில் கூற வேண்டாம்.
உன் பெற்றோருக்கு பிடித்தது என்ன? 
எப்படியும் நல்ல விஷயங்களை தான் கூறப் போகிறோம். அப்படியே கடைசியில், திருமணதிற்கு பிறகு அவர்களுக்கு உன்னையும் ரொம்ப பிடிக்கும் என்ற வார்த்தைகளை கறிவேப்பிலை போல சேர்த்துக் கொள்ளுங்கள்.
உன்னை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?
காலம், காலமாக கூறப்படுவது தான், உண்மை, நேர்மை, கடமை தவறாமல் இருப்பது. ஒருவரை ஒருவர் முழுவதாக புரிந்துக் கொள்வது தான் உண்மையான காதல்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad