உதடு கருப்பாக இருக்கிறதா? இதோ சில டிப்ஸ்..!

வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து லிப்ஸ்டிக் எனபடும் கெமிக்கல் மூலம் ஏற்படும் உதட்டின் கருமையை போக்க முடியும் என பார்க்கலாம்.

சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கருமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும்.

வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டின் மேல் சுமார் 20 நிமிடம் வரை ஊற வைத்து வந்தால், அது உதடுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு கருமையை படிப்படியாக குறைய செய்யும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை உதட்டில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ அவை உதடுகள் மென்மையாகவும், சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்.

மேலும், தயிரில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பதால் அவற்றை உதட்டில் தடவி வர உதடுகள் மென்மையாகவும், உதட்டில் ஏற்படும் கருமையையும் நீக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad