பிரித்தானியா வரையிலும் பிரபலமடைந்த இலங்கையின் கருங்கல் ரொட்டி!!

இலங்கையில் தயாரிக்கப்படும் ரொட்டி பிரித்தானியா வரை பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரனை, இரத்தினபுரி வீதியில், கிரிஎல்ல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் தயாரிக்கப்படும் ரொட்டியே இவ்வாறு பிரபல்யம் அடைந்துள்ளது.

கருங்கல்லில் ரொட்டி சுடுவதே இந்த கடையில் உள்ள சிறப்பம்சமாகும்.

ரொட்டி கடையை நடத்தி செல்வோர், ரொட்டி சுடும் கல் ஒன்றை கொள்வனவு செய்யக் கூடிய வசதி இருக்கவில்லை. இதன் காரணமாக அருகிலுள்ள காட்டிலுள்ள அளவிலான கருங்கல் ஒன்றை கொண்டு வந்து ரொட்டி சுடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வித்தியாசமாக சுடப்படும் இந்த ரொட்டியை சுவைத்தவர்கள் தொடர்ந்து அந்த கடையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு கல்லில் சுட்டு விற்பனை செய்த இந்த ரொட்டி பிரித்தானியா வரை பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபலமடைந்த ரொட்டிக் கடையின் வருமானம் அதிகரித்த போதும், கல்லில் ரொட்டி சுடும் நடவடிக்கையினை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த கல் மிகவும் அதிர்ஷ்டமானதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பிரித்தானியா சென்று வசிப்பவர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வரும் அந்த கடைக்கு தவறாமல் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad