பாலில் மயக்க மருந்து கொடுத்து மாடல் அழகியை கற்பழித்த மன்மதன்! இவர் யாரென்று தெரியுமா ?

பெங்களூருவில் உள்ள பானஸ் வாடி பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா (பெயர் மாற்றப்பட்டுள் ளது). 17 வயதான இவர் தனியார் கல்லூரியில் பியூசி முத
லாம் ஆண்டு படித்து வருகிறார். திரைப்பட நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 2 ஆண்டுகளாக பேஷன் துறையில் மாடலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூர்ணிமா நேற்று ராமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஃபேஷன் ஷோ ஏற்பாட்டாளரும், நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளருமான பிரகதீஷ் கபூர் தனக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார். இந்த சம்பவத்தை கபூர் தனது செல்போனில் படம்பிடித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவரை கைது செய்து,
தண்டிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமூர்த்தி நகர் போலீஸார் நேற்று மாலை பிரகதீஷ் கபூரை கைது செய்தனர். பிரகதீஷ் கபூரின் இல்லத்தில் சோதனை நடத்தியபோது கஞ்சா, போதை மாத்திரைகள் சிக்கின. மேலும் ஏராளமான பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ பதிவுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு பெண்களுடனும் நடிகைகளுடனும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகினருடன் கபூர் மிகவும் நெருக்கமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ராமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் கபூருக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளனர். கன்னட திரைப்பட நடிகைகள் சிலரும், மாடல்கள் சிலரும் தங்களுக்கும் கபூர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இதனால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad