உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வனப்பகுதிக்கு தனியாக காதலனைச் சந்திக்கச் சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த அவலம்…!

மஹியங்கனையில், 17 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஐந்து பேர் 12 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வகுபிற்கு செல்வதாக வீட்டில் கூறி தனது 20 வயதான காதலனுடன் வனப்பகுதி ஒன்றில் தனித்திருந்த போது, 17 யுவதியான சிறுமி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காதலனை தாக்கி அச்சுறுத்திய கும்பல், சிறுமியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மஹியங்கன தியபான வெவ பிரதேச காட்டுப் பகுதியில் 20 வயதான இளைஞருடன் தனித்திருந்த போது, அங்கு வந்த ஐந்து இளைஞர்கள் காதலனை தாக்கி, சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

வார இறுதி தனியார் வகுப்புக்கு செல்வதாக வீட்டில் கூறி சிறுமி, காதலனுடன் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான யுவதி சம்பவம் தொடர்பில் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து யுவதி பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு 12 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னதாக பொலிஸார் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

17, 18, 20, 22 மற்றும் 25 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர் .சந்தேக நபர்கள் இன்றைய தினம், மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.