6 மாத குழந்தை வெட்டி கொலை. மாமியின் கை துண்டானது..

திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவில், கப்பல்துறை கிராமத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 மாத பச்சிளம் குழந்தை வெட்டிக் கொல்லப்பட்டது. தனது தந்தையினாலேயே குழந்தை கொல்லப்பட்டது.

தாக்குதல் தாரியின் மாமா, மாமி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாமியின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கப்பல்துறை 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த ல.தக்சன் (6 மாதம்) என்ற குழந்தையே கொல்லப்பட்டது. பெர்னாந்து குமார் (47), அவரது மனைவி முத்துமாரி (43), ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சந்தேகநபரான 23 வயதான இளைஞன், காயமடைந்த தம்பதியின் 15 வயதான மகளை திருமணம் செய்துள்ளார். அவர்களிற்கு 3 மாத குழந்தையுள்ளது.

பராயமடையாத சிறுமியை திருமணம் செய்ததால், அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சந்தேகநபர் வீட்டிற்கு வந்த போது, அவரது மனைவி இருக்கவில்லை. குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. பால் கொடுப்பது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு, மாமனாருக்கும் மருமகனிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து மாமனார் மீது மருமகன் வாள்வெட்டு நடத்தியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த குழந்தையும் வாள்வெட்டிற்கு இலக்கானது.

கணவர் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற மனைவியின் கை, மணிக்கட்டுடன் துண்டானது.

அனைவரும் வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்பட்டனர்.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், கையை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும், அதனை பொருத்த முடியாமல் போனது.

காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஏனைய இருவரும் திருகோணமமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சந்தேகநபர் தலைமறைவாகி விட்டார்.