பாலியல் குற்றச்சாட்டு. மருத்துவர் ஸ்ரீ தரன் லண்டனில் தற்கொலை.

பிரித்தானியாவில் ஸ்டொக் டோன் என்னும் நகரில் உள்ள, டீஸ் என்னும் ஆற்றங்கரையில் தமிழ் மருத்துவரான ஸ்ரீ தரன் சுரேஷ் அவர்களின் உடல் இருந்ததை பொலிசார் கண்டு பிடித்தார்கள்.

அன்றைய தினம் அவருக்கு மருத்துவ கவுன்சிலில் இருந்து வந்த மின்னஞ்சலே அவர் தற்கொலைக்கு காரணம் என்று மனைவி விஜய லக்ஷ்மி தெரிவித்தார். கன்சல்டனாக இருந்த சுரேஷ், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவராக பணி புரிந்து வந்த நிலையில்.

தன்னை பாலியல் ரீதியாக பல இடங்களில் தொட்டார் என்று, இள வயதுப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். குறித்த பெண்ணின் மன நிலை காரணமாக, அவர் மாத்திரைகளை எடுத்து வந்தார்.

அந்தப் பெண்ணுக்கு சில வேளைகளில் நடக்காத ஒரு சம்பவம் நடந்ததாக இருக்குமாம். இதன் காரணத்தால் அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தாலும் அது செல்லுபடியாகாது என்று நினைத்திருந்தார் மருத்துவர் சுரேஷ்.

ஆனால் திடீரென விசாரணைகளை கை விடமாட்டோம். அது தொடர்ந்து நடக்கும் என்று மருத்துவக் கவுன்சில் ஈமெயில் மூலமாக அறிவித்துள்ளது. இதனை தாங்க முடியாத சுரேஷ் டீஸ் என்ற ஆற்றங்கரை அருகே சென்று. தனது மனைவியின் மோபைல் போனுக்கு ரெக்ஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

உண்மையில் நான் நிரபராதி. நான் எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர், மிகுந்த மன வேதனையோடு அந்த குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டர்.

இந்த சம்பவம் 2018ம் ஆண்டு நடந்தது. ஆனால் மருத்துவராக பணி புரிந்த தனது கணவருக்கு, மருத்துவ கவுன்சில் எந்த ஒரு உதவியையும் வழங்கவில்லை என்றும், ஆலோசனைகளையோ இல்லை மன ஆறுதலுக்கு கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அவரது மனைவி விஜய லக்ஷ்மி மான நஷ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

உண்மையில் மருத்துவக் கவுன்சில், நிச்சயமாக சுரேஷிற்கு ஏதாவது ஒரு வகையில், உதவி இருக்க வேண்டும். அவர் மன உழைச்சலைப் போக்க கவுன்சிலிங் ஆவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எதனையும் அவர்கள் செய்யவில்லை. இன் நிலையில் தான் மனைவி வழக்கை தொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.