திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி-2 பெண்களையும் திருமணம் செய்த நபர்!

 


இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதால், மணமகன் இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்ட சம்பவம், சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தோனேஷியாவின் Lombok Tengah-வை சேர்ந்த பெண் Nur Khusnul Kotimah(20). இவருக்கும் Korik Akbar(20) என்பவருக்கும் நடைபெறவிருந்த திருமணத்தின் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சமூகவலைத்தள பக்கத்தில், இந்த ஜோடியின் நண்பர்கள், அவர்களுக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை கூறி வந்துள்ளனர்.

அப்போது இதைக் கண்ட Korik Akbar-ன் முன்னாள் காதலி Yunita Ruri(21) உடனடியாக இது குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து, இவர்கள் திருமணத்திற்கு விரைந்து வந்த முன்னாள் காதலி Yunita Ruri, காதலனான Korik Akbar-யிடம் தன்னையும் திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், அதிர்ச்சியடைந்து, அதன் பின் இருவரையும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து Korik Akbar கூறுகையில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.

முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றேன். என் குடும்பத்தினருடன் ஆன நீண்ட விவாதத்திற்கு பிறகு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இருப்பினும் தற்போது நான் வேலையில்லாம இருப்பதால், இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்டது, எனக்கு சுமையாக இருப்பதாக கூறியுள்ளார்.  

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad