பல பெண்களை தனது வலையில் வீழ்த்திய நபர்-சிக்கியது எப்படி?

 


தமிழகத்தில் கணவன் பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை, மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. தற்போது 30 வயதாகும் இவருக்கும், முத்து என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்து கொண்டு முத்து, தன்னை ஆபாசமாக எடுத்த படத்தை வைத்துக் கொண்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், திருமணத்தின்போது எனது வீட்டில் முத்துவுக்கு 200 சவரன் நகை பல லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக எனது வீட்டார் கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகும் எனக்கு சொந்தமான எழும்பூரில் உள்ள வீட்டில் தான் தங்கி வந்தோம். அப்போது, சில காலம் வேலைக்கு சென்று கொண்டிருந்த கணவர் வேலையை விட்டு நின்று வீட்டிலேயே இருந்தார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தினார். அப்போது, எனது நகைகளை அடகு வைத்து அவருக்கு கார் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையை வைத்து கொடுத்தேன்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த எவாஞ்சலின் என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு என சொல்லி அழைத்து வந்தார். பின்னர் வீட்டுக்குள்ளேயே அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

அதை நான் கண்டித்ததால், என்னை தனிப்பட்ட முறையில் இருக்கும் போது வீடியோ எடுத்துவைத்து அதை இணையத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டுகிறார்.

மேலும், எனக்கு சொந்தமான வீட்டை விட்டு வெளியேற சொல்லி கொலை மிரட்டல் விடுக்கிறார். இப்போது அந்த வேலைக்கு வந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த கொண்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திவ்யா, முத்து நிறைய பெண்களை ஆபாசமாக படம் எடுத்துவைத்து ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

அவரது நண்பனின் மனைவி, அவரது அண்ணி மற்றும் சித்தி ஆகியோரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.