மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தை!

நாவலபிட்டி பகுதியில்13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவி புரிந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவர் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் அதிகளவான சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்திருந்தன.

குறிப்பாக கல்கிஸை பகுதியில் சிறுமியொருவரை இணைய வழியாக விற்பனை செய்து, பாலியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் 40ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.