யாழ் உரும்பிராயில் காவாலிகள் பெட்ரோல் குண்டு தாக்குதல்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.